வடக்கில் மீண்டும் முகாம்களை அமைக்கத் தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம்

குறிப்பிட்டளவான ஒரு காலத்துக்கு மாத்திரம், சிறிலங்கா இராணுவத்துக்கு தேவையான அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“இராணுவம் தனது கடமைகளை செய்யும். இராணுவத்துக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது பற்றி சிறிலங்கா அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.

தேசிய பாதுகாப்பு விடயத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது. இராணுவம் பலமாக இருக்கிறது. தேசிய பாதுகாப்பு, அதன் முக்கியமான கடமைகளில் ஒன்று.

தேசிய பாதுகாப்பு குறித்து ஏனையவர்களை விட எமக்கு அதிகமாகத் தெரியும். எதுவும் மாறவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், சிறிலங்காவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவம், நாட்டைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும்.

இராணுவ முகாம்கள் தொடர்பான எந்த முடிவும், இராணுவத்துடன் கலந்துரையாடியே எடுக்கப்பட்டது. இராணுவ முகாம்கள் கண்மூடித்தனமாக அகற்றப்படவில்லை.

எனினும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த, மீள ஒருங்கிணைக்க மற்றும் முகாம்களை மீண்டும் அமைப்பதற்கு இராணுவம், தயாராகவே உள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!