பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் குரல் சோதனை

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் நேற்று அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில், குரல் சோதனை நடத்தப்பட்டது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில், நேற்றுக்காலை 10 மணிக்கு, நாலக சில்வாவிடம் குரல் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை முடிந்து வெளியே வந்த அவரிடம், இந்தச் சதித் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எவர், எந்தப் பதிலையும் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!