யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்! – மாணவர் ஒன்றியம் பரபரப்பு குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால், நேற்று நடத்தப்பட்ட செய்தியாளார் சந்திப்பில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக் கழகத்துக்குள் நடந்துள்ளன. அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அந்த குற்றங்களைச் செய்தவர்கள் தப்பித்துச் செல்லக் கூடிய நிலைமைய காணப்படுகின்றது. குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போது அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையாலேயே இத்தகைய இழிவான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் நிர்வாகத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், பேரவைக்கும் தெரியப்படுத்தியும் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமை தற்போதும் காணப்படுகின்றது என்று மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!