பிரதமரின் கையில் அதிகாரம் இருந்தும் அவர் என்ன செய்தார் – மஹிந்த சமரசிங்க

தேசிய பொருளாதார சபையின் மூலமாக என்ன செய்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்புகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் பொருளாதார அதிகாரம் பிரதமர் கையில் இருந்தும் அவர் என்ன செய்தார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வி எழுப்புகின்றார்.

தேசிய பொருளாதார சபையின் மூலமாக நெருக்கடிகளை சமாளிக்க ஜனாதிபதி முயற்சிகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நிகழ்கால பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதி – பிரதமர் – நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்கள் கூடி கடந்த வாரம் கலந்துரையாடியிருந்தோம்.

தற்போது ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு கையாள்வது. பொருளாதார நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து ஆராயப்பட்டது.

குறிப்பாக அமெரிக்க அரசியல் திட்டத்தின் தாக்கமே இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் வட்டி வீதத்தை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் முதலீடுகளை செய்யவிருந்த அமெரிக்க நிறுவனங்கள் பல தமது முடிவினை கைவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கே சென்றுவிட்டனர். இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!