கோத்தாவின் நிதி மோசடி வழக்கு – தினமும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் முடிவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நிதி முறைகேடு வழக்கை, டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் தினவும் விசாரிக்கப் போவதாக, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிதிமுறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

தங்காலையில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்காக, 33 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்று கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வு, டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம், இந்த வழக்கு தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!