இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – எஸ்பி திசநாயக்க

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து மீண்டும் ஜனாதிபதி சிறிசேனவுடன் பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொறுப்பை அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதற்காக நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் தேர்தல்,நாட்டின் பாதுகாப்பற்ற நிலை,தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது உட்பட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பு குறித்து சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி சாதகமான விதத்தில் பதிலளித்துள்ளார் எனவும் எஸ் பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!