ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராகத் தேர்வு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

193 உறுப்பு நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளைத் தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளைப் பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு தேர்வாக முடியும். இதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை அவையில் ஐந்து இடங்கள் உண்டு.

இதற்காக இதர நாடுகளின் உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியா மற்ற நாடுகளைவிட அதிக ஆதரவைப் பெற்றுள்ளது. 188 வாக்குகளைப் பெற்றுள்ள இந்தியா, வரும் 2019 ஜனவரி முதல் மூன்றாண்டுகளுக்கு இந்த அவையில் இந்தியா உறுப்பினராக இருக்கும். இது தொடர்பாக ஐ.நா.விக்கான இந்தியாவின் தூதுவர் சையது அக்பருதீன், “ஆதரவளித்தவர்களுக்கு நன்றி! மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!