இடைக்கால அரசை அமைக்கும் எண்ணம் இல்லை – மகிந்த அமரவீர

இடைக்கால மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் அனைத்துமே, திருபுபடுத்தப்பட்டவை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மொனராகலவில் நேற்று அன்னாசி உற்பத்தி அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர்,

“இடைக்கால அரசாங்கத்தை அமைக்கின்ற எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான ஒன்றை அமைக்கும் எண்ணம் எமக்குக் கிடையாது.

2020 ஆம் ஆண்டு வரை இந்த கூட்டு அரசாங்கம் பதவியில் இருக்கும். அதற்கு முன்னர் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படாது.

எந்தவொரு புதிய அரசாங்கமும் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட வேண்டுமே தவிர, சூழ்ச்சிகளின் மூலம் அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!