உடல் பருமனால் ஒதுக்கப்பட்டவர் இன்று பொடி பில்டிங்கில் மிஸ் வேர்ல்டு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 நாடுகள் கலந்துகிட்ட பாடி பில்டிங் போட்டியில் ரூபி ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை ஜெயிச்சுருக்காங்க. பாக்குறவங்களுக்கு இது ஈசியா தெரியலாம் ஆனா இதுக்காக அவங்க 5 மாசம் கடுமையா உழைச்சிருக்காங்க

உடல் பருமனால் தன் கணவனாலயே உதாசீனப்படுத்தப்பட்டப் பெண் ரூபி குளோரி. இன்று மாநிலங்கள் கடந்து பாடி பில்டிங்கில் பல தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ரூபி சில வருடங்களுக்கு முன்பு உடல் பருமனின் காரணமாக சில இழப்புகளைச் சந்தித்தப் பிறகு எடையை குறைப்பதற்காக தொடர்ந்து நடைப்பயிற்சி செய்தார். உழைப்புக்கேற்ற பயனாய் அவருடைய எடையும் குறைந்துள்ளது. அதனால் கிடைத்த உற்சாகத்தில் பாடி பில்டிங் பக்கம் தன் கவனத்தை செலுத்தியிருக்கிறார். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பதங்களை வென்ற ரூபி தற்போது டெல்லியில் உலகளாவிய அளவில் ‘நேச்சுரல் பாடிபில்டிங் யூனியன் இன்டர்நேஷனல்’ நடத்திய போட்டியில் பங்கேற்று ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை பெற்றிருக்கிறார்.

இது குறித்து அவருடைய கோட்ச் கார்த்திக் பேசுகையில்., “என்கிட்ட நிறைய பேர் ட்ரெய்னிங் வந்துட்டுதான் இருக்காங்க. ஆனா ரூபி மாதிரி ஒரு ஸ்டூடண்ட் இதுவரைக்கு நான் பாக்கல. ரூபியை நான் 2 வருஷத்துக்கும் மேல ட்ரெய்ன் பண்றேன். பயங்கர டெடிகேட்டானவங்க. ஒரு நாள் கூட அவங்க ட்ரெய்னிங், டயட் லிஸ்ட ஸ்கிப் பண்ணதில்லை. முதல் முறையா பயிற்சி எடுக்க வர்றப்ப 79 கிலோ, இப்ப 24 கிலோ குறைச்சிட்டாங்க. காலை, மாலைனு ரெண்டு நேரமும் 2 மணிநேரம் பயிற்சி எடுத்துப்பாங்க. இதுக்காக டீச்சர் வேலையை விட்டு முழு நேர ஜிம் பயிற்சியாளரா சேர்ந்து, மத்தவங்களுக்குப் பயிற்சி கொடுத்துட்டே அவங்களும் பயிற்சி எடுத்துக்குறாங்க. கடந்த ஞாயிற்றுகிழமை 17 நாடுகள் கலந்துகிட்ட பாடி பில்டிங் போட்டியில் ரூபி ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை ஜெயிச்சுருக்காங்க. பாக்குறவங்களுக்கு இது ஈசியா தெரியலாம் ஆனா இதுக்காக அவங்க 5 மாசம் கடுமையா உழைச்சிருக்காங்க” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!