எனது கூட்டணியில் தமிழ் அரசுக் கட்சியும் இணையலாம்! – விக்னேஸ்வரன்

தனது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூ­டத் தனது கூட்­ட­ணி­யில் இணைந்து கொள்­ள­லாம் என்று வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்ளார். தனி­க் கட்சி தொடங்­குவதாக அறி­வித்து 24 மணி நேரத்­திற்­குள் அவர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

காரை­ந­கர் பிர­தேச சபை­யின் கசூ­ரினா சுற்­று­லா­மை­யத்­தில் முத­ல­மைச்­ச­ரின் அமைச்­சின் மாகாண குறித்­தொ­துக்­கப் பட்ட அபி­வி­ருத்தி நன்­கொடை நிதி­யின் கீழ் அமைக்­கப்­பட்ட அம்­மாச்சி உண­வ­கக் கட்­ட­ட­தி­றப்­பு­விழா நேற்றுமாலை இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­றிய வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் கஜ­தீ­பன் தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் தமிழ்த் தரப்­பு­க­ளுக்­குள் பிள­வு­கள் ஏற்­ப­டக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­தி­னார்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும் விக்­னேஸ்­வ­ர­னும் முரண்­ப­டு­வ­தால் அவர்­க­ளுக்கு எந்த பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டப் போவ­தில்லை. ஆனால் தமிழ் இனம் தான் பெரும் பிரச்­சி­னையை எதிர்­கொள்­ளப் போகின்­றது. தந்தை செல்வா ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்­தை­விட்­டுப் பிரிந்து சென்று தமி­ழ­ர­சுக் கட்­சி­யைத் தொடக்­கி­னார். கட்­சி­யைச் சிறந்­த­தோர் நிலைக்­குக் கொண்டு வந்த பின்­ன­ரும் மக்­க­ளின் நல­னைக் கருத்­தில்­கொண்டு ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்­தின் வீடு சென்று ஒற்­று­மையை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

நாம் வர­லாற்­றின் முக்­கி­ய­மான கட்­டத்­தில் உள்­ளோம்.எமது இனத்­துக்­கான தீர்வு முயற்­சி­யில் எமது தலை­மை­கள் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கும்­போது நாம் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வது பொருத்­த­மல்ல. நாம் இவ்­வாறு பிரிந்து செல்­வோ­மா­யின் கிழக்கு மாகா­ணத்­துக்கு ஏற்­பட்­டுள்ள நிலை­மையே வடக்கு மாகா­ணத்­துக்கு ஏற்­ப­டும். முதல்­வர் இதனை உணர்ந்து ஒற்­று­மையை சிதைக்­காது ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்­டும் எனக் கோரி­னார்.

தனது உரை­யில் அதற்­குப் பதி­ல­ளித்த விக்­னேஸ்­வ­ரன், தமது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூ­டத் தனது கூட்­ட­ணி­யில் இணைந்­து­ கொள்­ள­லாம் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!