முடிவுக்கு வந்தது வட மாகாண சபையின் பதவிக்காலம் – பிரித்தானிய தூதுவர் கவலை

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மாகாண சபை ஆளுனர் றெஜினோல்ட் குரேயின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

கடந்த 2013 செப்ரெம்பர் 25ஆம் நாள், வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது.இந்த நிலையி், சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம், நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாமை குறித்து சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் ஒன்பது மாகாணசபைகளில் ஆறாவது மாகாண சபையின் பதவிக்காலமும், புதிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படாமல் முடிவுக்கு வருவதையிட்டு, பலர் ஏமாற்றமடைவார்கள் என்றும், எமது நாடுகளில் சரியான நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது, ஜனநாயகத்தின் பெறுமானங்களுக்கு முக்கியமானது என்றும் கீச்சகத்தில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!