அரச ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் – பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்காவில் கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசாங்கம் ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐரிஎன் என அழைக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர், ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரிஎன் செய்தி அறைக்குள் நுழைந்த ஒரு குழுவினர் அங்கிருந்த ஊடகப் பணியார்களைத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்தே, அரச ஊடக நிறுவனங்களுக்கு இராணுவ, பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் இப்போது, ஒன்றிணைந்து உறுதியான -முற்போக்கான சிறிலங்காவைக் கட்டியெழுப்ப முடியும் என்று அவர் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!