சிறிலங்கா நிலவரம் குறித்து ஐ.நா பொதுச்செயலர் கரிசனை

சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ சிறிலங்காவின் பிந்திய நிலவரங்களை, ஐ.நா பொதுச்செயலர் பாரிய கரிசனையுடன் கவனித்து வருகிறார்.

ஜனநாயக பெறுமானங்களை மதிக்குமாறும், அரசியலமைப்பு விதிகளையும், செயல்முறைகளையும் பின்பற்றுமாறும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை அவர் கோருகிறார்.

அனைத்து தரப்பினரும், கட்டுப்பாட்டுடனும், நெருக்கடியான நிலைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் அவர் கோருகிறார்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!