வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் – கனடா

சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும் கவலையடைந்துள்ளது என்றும், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும், சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும் கவலையடைந்துள்ளது, நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது, ஜனநாயகத்துக்கான முக்கியமான மூலைக்கல் (cornerstone) ஆகும். அனைத்து தரப்புகளும், சிறிலங்காவின் அரசியலமைப்பை பின்பற்றுமாறும், வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறும் நாங்கள் கோருகிறோம்.

பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதி, தண்டனையில் இருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வருதல், குறித்து தனது சொந்த மக்களுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, சிறிலங்கா அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!