ஈபி­டி­பி­யி­டம் ஆத­ரவு கேட்­டது ‘டீல்’ அல்ல -ரெலோ !!

உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றிய இடங்­க­ளில் அது ஆட்சி அமைக்க ஆத­ரவு தரு­மாறு ஈபி­டி­பி­யி­டம் கோரி­யமை ‘‘கோட்­பாட்டு அர­சி­யலே’’ தவிர அது கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான ‘‘டீல்’’ அல்ல.

இவ்­வாறு தெரி­வித்­தார் ரெலோ கட்­சி­யின் செய­லா­ளர் ந.சிறிகாந்தா. “டீல் பேசு­கின்ற அர­சி­யல் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அக­ரா­தி­யி­லேயே இல்லை’’ என்­றும் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சபை­க­ளில் தாம் ஆட்சி அமைப்­ப­தற்­கா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் ஈபி­டி­பி­யின் தலை­வர்­க­ளு­டன் விடாது தொடர்ந்து தொலை­பே­சி­யில் பேசி வந்­தார்­கள் என்று அந்­தக் கட்­சி­யி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர் என்று ஊட­கங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. அதற்­குக் கருத்­துத் தெரி­விக்­கும் வகை­யி­லேயே சிறி­காந்தா இத­னைத் தெரி­வித்­தார்.

‘‘யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சபை­க­ளில் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைப்­பது என்­றும் தீவ­கத்­தில் உள்ள மூன்று சபை­க­ளி­லும் ஈபி­டிபி ஆட்­சி­ய­மைப்­பது என்­றும் ‘டீல்’ பேசப்­பட்­டது. தாம் ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு தரு­மாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எம்.ஏ.சுமந்­தி­ரன், மாவை சோ.சேனா­தி­ராசா மற்­றும் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் ஆகி­யோர் விடாது பேசி­னர். அதற்­கான ஆதா­ரங்­கள் எம்­மி­டம் இருக்­கின்­றன’’ என்று ஈபி­டி­பி­யின் யாழ். மாவட்ட அமைப்­பா­ளர் க.சிறீ­ரங்­கன் தெரி­வித்­தி­ருந்­தார் என்று ஊட­கச் செய்­தி­கள் கூறின.

இது தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கும் வகை­யில் ரெலோ­வின் செய­லா­ளர் நாய­கம் ந.சிறீ­காந்தா நக­ரில் உள்ள தனி­யார் விடு­தி­யில் நேற்­றுச் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார். சபை­க­ளில் ஆட்­சி­யைப் பிடிப்­பது தொடர்­பில் ஈபி­டி­பி­யு­டன் பேச்­சுக்­களை ஆரம்­பித்­த­வ­ரும் இவரே. நேற்­றைய சந்­திப்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளு­ராட்சி சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்­கக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு கோரி­யி­ருந்­த­தாக ஈ.பி.டீ.பி. சாா்ந்தவா்­கள் தொிவித்­தி­ருந்­த­னா். நாங்­கள் அதனை ஆத­ரவு என்று கூற­வில்லை. மாறாக ஒரு கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லேயே அந்­தக் கட்­சி­யு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம்.

சபை­க­ளில் பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் கட்­சி­களே அந்­தந்­தச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைப்­பது, அதற்கு மற்­றைய கட்­சி­கள் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது என்ற நோக்­கிலே கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இது எந்த வகை­யி­லும் ‘டீல்’ ஆகி­வி­டாது, அத்­து­டன் அத்­த­கைய ‘டீல்’ அர­சி­யல் தமிழ் கூட்­ட­மைப்­பின் அக­ரா­தி­யிலே இல்லை.

மேலும் டக்­ளஸ் தேவா­னந்தா உட்­பட்­ட­வா்­க­ளு­டன் பேசி­யது ரேலோவே தவிர தமி­ழத்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பல்ல – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!