சம்­பந்­தனை ஐ.தே.கட்சி முழு­மை­யாகப் பாது­காக்­கும் -ரவி !!

எதிர்க்­கட்சித் தலை­வர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டால் ஐக்­கிய தேசி­யக் கட்சி அவரை முழு­மை­யா­கப் பாது­காக்­கும். இந்­தத் தீர்­மா­னம் அர­சி­யல் நோக்­கம் கொண்­டது. எனவே இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் அவரைப் பாது­காப்­ப­தில் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னை­யும் இல்லை.

இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உப தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­தார். எதிர்க்­கட்சித் தலை­வர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் குறித்து வின­வி­ய­போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சுதந்­தி­ரக் கட்சி தொடர்ந்­தும் அர­சில் உள்ள நிலை­யில் அதன் ஒரு தரப்­பி­னர் எதிர்க்­கட்­சி­யில் இருப்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
எந்­தக் கார­ணம் கொண்­டும் அர­சி­யல் ரீதி­யான சூழ்ச்­சி­க­ளுக்­கும் நகைச்­சுவை பாங்­கான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்க மாட்­டோம். எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யைக்­கூட்டு எதிர்க்­கட்­சி­யால் கோர முடி­யாது.

அர­சி­யல் நோக்­கங்­க­ளுக்­கா­கவே எதிர்க்­கட்சி தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்டு வரு­வ­தற்­குக் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னர் முயற்சி செய்­கின்­ற­னர். அதற்கு நாம் ஒரு­போ­தும் இட­ம­ளிக்க மாட்­டோம்.
ஆரம்­பத்­தில் அரசை வீழ்த்­து­வ­தற்கு முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­க­வும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அதனை நாம் தவி­டு­பொ­டி­யாக்­கி­னோம். இந்த நிலை­யில் எதிர்க்­கட்சி தலை­வர் பத­வி­யின் மீது கூட்டு எதிர்க்­கட்­சி­யின் அவ­தா­னம் திரும்­பி­யுள்­ளது. ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி ஒன்­றில் அர­சில் இருக்க வேண்­டும். இல்­லை­யேல் எதிர்க்­கட்­சி­யில் இருக்க வேண்­டும். பாதி அர­சில் மீதி எதிர்க்­கட்­சி­யில் என்­பது வேடிக்­கை­யா­னது. எனவே கூட்டு எதிர்க்­கட்­சி­யால் எதிர்க்­கட்சி தலை­வர் பத­வி­யைக் கோர முடி­யாது. என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!