நாங்கள் அதிகாரிகளின் விளையாட்டுப்பொருளாகிவிட்டோம்- கதறும் வடகொரிய பெண்கள்

வடகொரியாவில் பெண்கள் அரசாங்க அதிகாரிகள் சிறைச்சாலைகளின் பாதுகாபபு உத்தியோகத்தர்கள் பொலிஸார் உட்பட பல தரப்படடவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளவது வழமையான விடயமாகிவிட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

2011 ம் ஆண்டிற்கு பின்னர் வடகொரியாவிலிருந்து தப்பியோடியவர்கள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

2011 இல் கிம் ஜொங் அன் புதிய பிரதமராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

வடகொரிய அதிகாரிகள் பாலியல்வன்முறைகளில் ஈடுபடுவது சாதாரணமாகிவி;;ட்டது நாளாந்த விடயமாகிவிட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிகாரிகள் எந்த வித தண்டனையும் அனுபவிக்காமல் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் எனவும் மனித உரிமை கண்காணி;ப்பகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் எங்களை விளையாட்டுப்பொருளாhக கருதுகின்றனர் என தெரிவித்துள்ள 40 வயது பெண்மணியொருவர் நாஙகள் ஆண்களின் தயவில் இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை என்பது வடகொரியாவில் சாதாரண விடயமாகிவிட்டது என தெரிவித்துள்ள பெண்கள் நாங்கள் இதனை வழமைக்கு மாறான விடயமாக கருதமுடியாத நிலையில் உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரியொருவர் ஒரு பெண்ணை தனது பாலியல் இச்சைக்காக தெரிவு செய்யும்போது அதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லாத சூழ்நிலை காணப்படுகின்றது என வடகொரிய பெண்கள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவிலிருந்து தப்பியோடுவதற்கு முயன்றவேளை கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் இவ்வாறான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.

அவர் தான் விரும்பிய விதத்தில் அத்துமீறினார் என்னால் என்ன செய்ய முடியும் என அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடகொரிய அரசாங்கம் இவ்வாறான பிரச்சினை காணப்படுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் இவ்வாறன நடவடிக்கைகளை குற்றமாக அறிவிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!