ரணிலைச் சந்தித்தார் கோத்தா

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய முட்டுக்கட்டைகளைச் சமாளிப்பது தொடர்பாகவே, இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக, விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய முட்டுக்கட்டைகளை நீக்கி நாட்டுக்கு உதவுதல் தொடர்பான வழிமுறைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

ஐதேகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் நேற்றிரவு இதனை உறுதி செய்திருக்கிறார். எனினும், கலந்துரையாடப்பட்ட மேலதிக விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும், அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறினால், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!