குழந்தையின் டயப்பரை 14 நாட்களாக மாற்றாத பெற்றோர்: புழுக்கள் உருவாகி, அநாதையாக இறந்துக் கிடந்த குழந்தை

அமெரிக்காவின் குழந்தை ஒன்று தனது தொட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.

ஸ்டெர்லிங் என்ற அந்த நான்கு மாதக் குழந்தையை பரிசோதித்தபோது அதன் டயப்பர் 9 முதல் 14 நாட்கள் வரை மாற்றப்படாமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

டயப்பரினுள் பூச்சிகள் சென்று முட்டையிட்டதால், அதிலிருந்து புழுக்கள் உருவாகி, டயப்பர் ராஷ் என்னும் புண்கள் உருவானதால், மலத்திலுள்ள கிருமிகள் குழந்தையின் உடலுக்குள் நுழைந்ததோடு, போதுமான உணவும் இல்லாததால் குழந்தை உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குழந்தையை கவனிக்க தவறிய தந்தை, தாயாகிய இருவரும் குழந்தைக்கு ஆபத்தை விளைவித்தது மற்றும் கொலைக் குற்றம் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!