பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சாபம் தினகரனை சும்மா விடாது – ஆர்.பி .உதயகுமார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சாபம் தினகரனை சும்மா விடாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

‘வடகிழக்கு பருவ மழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளன. அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கையுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. பருவ மழைக்கான நிவாரண முகாம்கள் அமைச்ச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த காலம் போல் வெள்ளப்பாதிப்பு ஏற்படாது.

யாரையாவது பலி கொடுத்தாவது பதவிக்கு வந்துவிடலாம் என்று தினகரன் நினைக்கிறார். தினகரனிடம் எந்த கொள்கையும் கிடையாது. ஆட்சிக்கு வருவது மட்டுமே தினகரனின் லட்சியம். தினகரன் வந்து காப்பாற்றவேண்டிய சூழலில் அரசும், அ.தி.மு.க.வும் இல்லை. ராமநாதபுரத்தில் தினகரனுக்கு வரவேற்பு இல்லாத ஏக்கத்தில் அ.தி.மு.க.வினரின் பேனர்களை தினகரன் கட்சியினர் கிழித்துள்ளனர்.

ஜெயலலிதா மற்றும் மக்களால் பதினெட்டு பேருக்கு கொடுக்கப்பட்ட பதவி தினகரனால் பறிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்க விவகாரத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று கூறிய இரண்டு நாட்களுக்குள் முடிவு மாற்றியதன் காரணம் என்ன? குழாயடி சண்டையை உருவாக்கி, தான் பதவிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர் தினகரன். அந்த பதினெட்டு பேரின் சாபம் தினகனை சும்மா விடாது.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!