வெற்றிவிழா இம்முறையும் இல்லை!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை கொண்டாடும் வகையிலான எந்தவொரு நிகழ்வையும் இந்த ஆண்டிலும் நடத்துவதில்லை என்று ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அறிமுகம் செய்யப்பட்ட யுத்தவெற்றி கொண்டாட்ட நிகழ்வை ரத்து செய்தது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த வருடமும் அந்த நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகவும், இது தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

மே மாதம் 19ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டுவந்த போர்வெற்றிக் கொண்டாட்டங்கள் இந்த வருடம் நடத்தப்படாது என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் எழுத்துமூலம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!