ஒரு பாடத்­தில்­ கூட சித்­தி­ய­டை­யா­தோர் வடக்­கி­லேயே அதி­கம்!!

2017ஆம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­ப­க­ளின் அடிப்­ப­டை­யில் நாடு முழு­ வ­தி­லும் 7 ஆயி­ரத்து 308பேர் சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டை­யத் தவ­றி­யுள்­ள­னர். வடக்கு மாகா­ணத்­தில் மாத்­தி­ரம் 623பேர் சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­ டை­யத் தவ­றி­யுள்­ள­னர்.

இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 3.46 சத­வீ­த­மா­கும். தேசிய ரீதி­யில், சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டை­யத் தவ­றி­ய­வர்­கள் பட்­டி­ய­லில் வடக்கு மாகா­ணமே முத­லி­டத்­தில் உள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 339பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 127பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 84பேரும், வவு­னியா மாவட்­டத்­தில் 47பேரும், மன்­னார் மாவட்­டத்­தில் 26பேரும், சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டை­யத் தவ­றி­யுள்­ள­னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!