நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கி­னால் நாட்­டுக்கு ஆபத்து-விஜே­தாச ராஜ­பக்ச !!

நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அர­ச­த­லை­வர் முறை­மை­யின் கீழ் அர­ச­த­லை­வ­ரின் அதி­கா­ரம் இன்­னும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்­டுமே அன்றி அதனை இல்­லா­மல் செய்­யக் கூடாது. அவ்­வாறு குறைப்­பது நாட்டை அழி­வுக்கு இட்­டுச் செல்­லும்.

இவ்­வாறு முன்னாள் நீதி அமைச்­சர் விஜே­தாச ராஜ­பக்ச தெரி­வித்­தார்.
கொழும்­பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யால் அர­ச­த­லை­வ­ரின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கும் வகை­யில் தீர்­மா­னம் ஒன்­றைக் கொண்­டு­வ­ர­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. இதில் ஆச்­ச­ரி­யம் என்­ன­வென்­றால், இதே தீர்­மா­னத்­தைத் தான் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், அரச சார்­பற்ற அமைப்­புக்­க­ளும் முன்­வைத்து வரு­கின்­றன. இதற்­குக் கூட்டு எதிர்க் கட்­சி­யும் தனது ஆத­ரவை வழங்க முன்­வந்­துள்­ளன என்­பதே.

அர­சி­யல் ரீதி­யில் நாட்­டைப் பலப்­ப­டுத்த வேண்­டு­மா­னால், நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அர­ச­த­லை­வர் முறைமை இன்­னும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!