சம்பந்தனை விரட்டியடிக்க கூட்டு எதிரணி முழு முயற்சி!!

எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தனை அந்­தப் பத­வி­யில் இருந்து விரட்­டி­ய­டிக்­கத் தீவி­ர­மாக முயற்­சிக்­கப் போ­வ­தாக கூட்டு எதி ரணி தெரி­வித்­தி­ருக்­கி­றது.

பத­வி­யில் இருந்து சம்­பந்­தன் தானா­கவே வில­கிச் செல்­வ­தற்­கான அழுத்­தங்­களை அனைத்து வழி­க­ளி­லும் கொடுப் ப­தற்கு தமது தரப்பு முடிவு செய்­துள்­ள­தாக கூட்டு எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் தினேஸ் குண­வர்த்­தன தெரி­வித்­தார்.

‘‘எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னுக்கு எதி ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு வ­ரு­வ­தில்­அர்த்­த­மில்லை. மாறாக அவ­ரா­கவே பதவி வில­கு­வதே சிறந்­த­தாக அமை­யும் . ஆனால் சம்­பந்­தனை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி யி­லி­ருந்து நீக்­கா­விட்­டால் சபா­நா­ய­க ருக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­வ­தற்­கும் கூட்டு எதி­ரணி நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது’’ என்­றார் அவர்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரு­வது தொடர்­பா­கச் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­ய­போதே தினேஷ் குண­வர்த்­தன இத­னைக் குறிப்­பிட்­டார்.

அவர் இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் பதவி வில­கு­வ­தற்­கான அழுத்­தங்­க­ளைப் கொடுப்­ப­தற்கு அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் துரித கதி­யில் முன்­னெ­டுப்­ப­தற்­குக் கூட்டு எதி­ரணி தீர்­மா­னித்­துள்­ளது.

எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது.

ஆனால் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரு­வது அர்த்­த­மற்­றது என்­பதை நாங்­கள் உணர்­கின்­றோம்.

எனவே எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் தானா­கவே பதவி வில­கு­வ­தற்­கான அழுத்­தங்­க­ளைக் கொடுப்­பதே பொருத்­த­மா­ன­தாக அமை­யும்.

அதற்­காக நாங்­கள் எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்கு எதி­ரா­கப் பல்­வேறு வழி­க­ளி­லும் செயற்­ப­டு­வ­தற்­குத் தீர்­மா­னித்­துள்­ளோம். அவர் பத­வி­வி­ல­கும் வரை நாங்­கள் அழுத்­தம் கொடுப்­போம்.

நாடா­ளு­மன்­றில் சம்­பந்­தனை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக சபா­நா­ய­கரே நிய­மித்­தி­ருக்­கின்­றார்.

பெரும்­பான்­மைப் பலம் எம்­மி­டம் இருக்­கும்­போது சம்­பந்­தனை எதிர்க் கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­வேண்­டி­யது சபா­நா­ய­க­ரின் கடமை. ஆனால் சபா­நா­ய­கர் அந்­தக் கட­மை­யைச் செய்­யா­மல் இருக்­கின்­றார். அவர் இப்­ப­டியே செயற்­ப­டு­வா­ரா­னால் அவ­ருக்கு எதி­ரா­க­வும் நட­வ­டிக்கை எடுக்க க் கூட்டு எதி­ரணி தயங்­காது – என்­றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!