வைரத்தை ரப்பர் போல் வளைக்கவும் விரிவாக்கவும் முடியும்: – ஆராய்ச்சியாளர்கள் தகவல்

உலகில் மண்ணிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் மிக உறுதியானது வைரம். வைரத்தை மற்ற பொருட்களால் வெட்ட முடியாது. அதனால் வைரத்தை வெட்ட வைரமே பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் வைரத்தின் வளையும் தன்மை மற்றும் விரிவடையும் தன்மையை அதிகரிக்கும் புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் வைரத்தை குறிப்பிட்ட அளவிற்கு ரப்பர் போல் வளைக்கவும், விரிவுபடுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளனர்.

இயற்கையாக கிடைக்கும் வைரத்தை வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். பின்னர் மிகச்சிறிய வைர ஊசி தயாரிக்கப்படுகிறது. நனோ அளவில் இருக்கும் இந்த ஊசியின் மேல் பகுதியை வளைத்தால், அது வளைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். இந்த ஊசியை விரிவாக்கவும் முடியும். இந்த கண்டுபிடிப்பு மூலம் வைரங்கள் பயன்படுத்தப்படும் சென்சிங், தகவல் சேமிப்பு, மருத்துவம், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!