அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?

அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அதற்கு விளக்கமளிக்க முடியாமல், அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர்.

ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெலவும், அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், நேற்று முன்தினம் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

நேற்று இவர்கள் இருவரும், இணைந்து வாராந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இதன்போதே, இராஜாங்க அமைச்சராக இருக்கும் கெஹலிய ரம்புக்வெல, எப்படி அமைச்சரவை இணைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அமைச்சர் மகிந்த சமரசிங்க பதிலளிக்கையில், “ ஊடகத்துறை அமைச்சு சிறிலங்கா அதிபர் பொறுப்பாக இருந்தாலும், ரம்புக்வெல இணை அமைச்சரவைப் பேச்சாளராக செயற்படுவார் என்று மொட்டையாகப் பதிலளித்தார்.

மைத்திரி- சஜித் சந்திப்பு தனக்குத் தெரியும் என்கிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய பேச்சுக்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று பதவி நீக்கப்பட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலக கடித தலைப்புடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்குத் தெரியாமல், சஜித் பிரேமதாச, சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தச் செய்திகளில் எந்த அடிப்படையும் இல்லை. சிறிலங்கா அதிபருடனான சந்திப்புக்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதுபற்றி சஜித் பிரேமதாச, தெரியப்படுத்தியிருந்தார். சந்திப்புக்குப் பின்னரும், அதுபற்றி தெளிவுபடுத்தியிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!