திருப்பங்களுக்குக் குறைவில்லாத அரச தலைவருக்கான தேர்தல்!!

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வா­ரென அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான துமிந்த திஸ­நா­யக்க அடித்­துக் கூறி­யி­ருக்­கி­றார்.

தாம் அடுத்த தடவை அரச தலைவருக்கான தேர்தலில் போட்­டி­யி­டு­வ­தில்­லை­யென்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வின் அறி­விப்­புக்கு எதி­ரா­ன­தா­கவே துமிந்­த­ வின் இந்த அறி­விப்பு வெளியா­கி­யுள்­ளது.

தெற்­கில் முக்­கிய கட்­சி­கள் இரண்டும்
உறுதியற்ற நிலையில்

தென்­ப­குதி அர­சி­ய­லில் ஏகப்­பட்ட குழப்­பங்­கள் காணப்­ப­டு­கின்­றன. பிர­தான கட்­சி­கள் இரண்­டுக்­குள்­ளும் என்ன நடக்­கின்­றது என்­பதே புரி­ய­வில்லை. தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் போது இது வெட்ட வௌிச்­ச­மா­னது.

சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் மகிந்­த­வின் ஆத­ர­வா­ளர்­கள் பலர் உள்­ள­னர். இவர்­கள் சம­யம் வரும்போது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­வ­தைக் காண­மு­டி­கின்­றது. அதே­போன்று, ஐ.தே. கட்­சி­யின் தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க ­வுக்கு எதி­ரான போக்­கை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னுள் சிலர் கொண்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில் அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­தல் எதிர்­பா­ராத திருப்­பங்­க­ளைக் கொண்­ட­தாக அமை­யப்­போ­கின்­றது. கடந்த தடவை போன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ரணில் ஆத­ரிப்­பார் என எதிர்­பார்க்க முடி­ யாது.

இந்த முறை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் அவர் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­விட்­டது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆத­ர­வா­ளர்­க­ளில் பல­ரும் அவ­ரைத் தேர்­த­லில் போட்­டி­யிட வற்­பு­றுத்தி வரு­வ­தா­க­வும் தெரி­கின்­றது.

தமக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தில் வெற்றி பெற்­ற­தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வின் செல்­வாக்கு திடீ­ரென அதி­க­ரித்து விட்­ட­தைக் காண­மு­டி­கின்­றது.

ரணி­லைத் தலைமை அமைச்­சர் பொறுப்­பி­லி­ருந்து விலகி விடு­மாறு அரச தலைவர் மைத்திரிபால கேட்­டுக் கொண்ட பின்­ன­ரும், அவ்­வாறு செய்­யா­மல் துணி­வு­டன் தமக்­கெ­தி­ரான தீர்­மா­னத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்­றமை, ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் மட்­டு­மன்றி முழு நாட்டிலுமே அவ­ரது மதிப்பை உயர்த்­தி­விட்­டது.

இதே­வேளை தீர்­மா­னத்தைக் கொண்­டு­வந்த மகிந்த, மக்­கள் தம்மை ஏள­ன­மா­கப் பார்க்­கின்ற நிலை மைக்­குத் தள்­ளப்­பட்டு விட்­டார். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் எதிர்­பா­ரா­மல் கிடைத்த வெற்­றி­யை­யும், அத­னால் கிடைத்த நன்­ம­திப்­பை­யும் அவர் வீண­டித்து விட்­ட­தா­கவே கருத முடி­கின்­றது.

இதை­விட மூன்­றா­வது தட­வை­யா­க­வும் அரச தலை­வர் தேர்­த­லில் அவ­ரால் போட்­டி­யிட முடி­யாது என்­ப­தால், அவ­ரது சார்­பில் அவ­ருக்கு நம்­பிக்­கை­யான ஒரு­வர் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­விட்­டது.

கோத்­த­பாய ராஜ­பக்ச களத்­தில் இறங்­கு­வா­ரென எதிர்­பார்ப்­புக்­கள் நில­வு­ கின்ற போதி­லும், கடைசி நேரத்­தில் இதில் மாற்­றம் ஏற்­பட்­டா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை. ஏனென்­றால் இலங்கை அர­சி­யல், குழம்­பிய குட்­டை­யின் நிலை­யில் காணப்­ப­டு­வ­தால் எத­னை­யும் உறு­தி­யா­கக் கூற­ மு­டி­ய­வில்லை.

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில்
பல­மு­னைப் போட்­டி­களை எதிர்­பார்க்க முடி­யும்

இங்கு சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து ஆட்சியை நடத்துவதாகக் கூறப்­ப­டு­கின்றபோதி­லும், உண்­மை­யான ஐக்­கி­யத்தை இங்கு காண­மு­டி­ய­வில்லை. இழு­ப­றி­ நி­லை­யைத் தான் இங்கு காண­ மு­டி­கின்­றது.

இந்த நிலை­யில் அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் பல­மு­னைப்­போட்டி இடம் பெறும் என்ற ஊகத்தை மறுத்து உரைக்க முடி­யா­துள் ளது. சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளும் களத்­தில் இறங்­கக்­கூ­டிய சூழ்­நி­லை­யும் காணப்­ப­டு­கின்­றது.

முன்­னர் ஒரு­முறை தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ராக இருந்த குமார் பொன்­னம்­ப­லம் அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் போட்­டி­யிட்­டமை நினை­வுக்கு வரு­கின்­றது.

தமி­ழர்­களே அவ­ருக்கு வாக்­க­ளிக்க முன்­வ­ரா­மை­யால் சுமார் ஒரு இலட்­சத்­துக்­கும் சற்று அதி­க­மான வாக்­கு­க­ளையே அவ­ரால் பெற­மு­டிந்­தது.

இலங்­கை­யின் அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் அளிக்­கப்­பட்ட மொத்த வாக்­கு­க­ளில் நிரா­க­ரிக்­கப்­பட்­டவை போக எஞ்­சு­ப­வற்­றில் 50 வீதத்­துக்­குச் சம­னான வாக்­கு­க­ளைப் பெறு­கின்ற ஒரு­வரே அரச தலை­வ­ராக முடி­யும்.

சிறு­பான்மை இனத்­தைச் சேர்ந்த ஒரு­வர் அரச தலை­வ­ராகி விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே அர­ச­மைப்­பில் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆனால் சிறு­பான்­மை­யி­ன­ ரின் வாக்­கு­க­ளைப் பெற்று பெரும்­பான்மை இனத்­த­வர் ஒரு­வர் தேர்­த­லில் வெற்­றியை ஈட்­டிக்­கொள்ள முடி­யும். கடந்த தடவை இது­தான் நடந்­தது. சிறு­ பான்­மை­யின மக்­க­ளின் வாக்­கு­களே மைத்­தி­ரி­பால சிரி­சே­னவை அரச தலை­வ­ராக்­கி­யதை எவ­ரும் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள்.

அரச தலை­வர் தேர்­த­லின் வெற்­றி­ தோல்வி இம்­மு­றை­யும் சிறு­பான்­மைத் தமிழ் மக்­க­ளது கைக­ளி­லேயே

இந்த தட­வை­யும் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் பல முனைப் போட்­டி­யில் இறங்­கி­னால், சிறு­பான்மை மக்­க­ளின் உத­வியை அவர்­கள் நாட­வேண்­டிய நிலை உரு­வா­கும். ஆனால் அவர்­கள் எதிர்­பார்க்­கின்ற உதவி தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்­குமா? என்­பது சந்­தே­க­மா­னதே.

ஏனென் றால் கடந்த தடவை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்து ஏமாந்து போன­வர்­கள் மீண்­டும் அதே தவறைப் புரி­வ­தற்கு முன்­வர மாட்­டார்­கள். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­கூட தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தில் அக் கறை செலுத்­தா­த­தால், அவ­ருக்­கும் தமி­ழர்­க­ளது ஆத­ரவு கிடைக் கப்­போ­வ­தில்லை.

மகிந்த தரப்­பி­லி­ருந்து வேட்­பா­ள­ராக எவர் நிறுத்­தப்­பட்­டா­லும், அவ­ரை­யும் நிரா­க­ரிப்­ப­தற்­குத் தமி­ழர்­கள் தயங்க மாட்­டார்­கள். இத­னால் கடந்த 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்­தது போன்று மீண்­டும் நிக­ழக்­கூ­டு­மென எதிர்­பார்க்க முடி­யும். ஒட்டு மொத்­த­மா­கப் பார்க்­கும் போது எதிர்­வ­ரும் அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தல் திருப்­பங்­கள் பல நிறைந்­த­ தொன்­றா­கவே அமை­யப் போகின்­றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!