துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 மாணவர்களும் விடுவிப்பு

ஆப்பிரிக்காவின், கேமரூன் நாட்டில் பாடசாலையொன்றிலிருந்து தீவிரவாதிகளினால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 பாடசாலை மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல் நிலை பாடசாலையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளினால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 78 மாணவர்கள், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன சாரியொருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எதற்காக கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இந் நிலையில், கடத்தப்பட்ட மாணவர்கள் 78 மாணவர்களையும், சாரதியையும் தீவிரவாதிகள் விடுவித்துள்ள நிலையில், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் தீவிரவாதிகள் தடுத்து வைத்துள்ளனர்.

அவர்களை கடத்தியதற்கான காரணம் மற்றும் தீவிரவாதிகளின் கோரிக்கை குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

கேமரூனில் பிரிவினைவாதிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே அந்நாட்டு அரசுக்கு எதிராக தீவிரவாதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தக் கடத்தலில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!