ஸ்பைடர்மேனுக்கு உயிர்கொடுத்த ஸ்டேன் லீ காலமானார்

ஹொலிவுட்டின் பல பிரம்மாண்ட படங்களின் பிரபல கொமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய கொமிக்ஸ் நாயகன் ஸ்டேன் லீ உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

ஹொலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல கொமிக்ஸ் நாயகன் ஸ்டேன் லீ தனது 95 வது வயதில் உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலமானார்.

மார்வெல், டிசி கொமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டேன் லீ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் ஒப் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் உள்ளிட்ட மார்வெல்லின் பல கொமிக்ஸ் கதாபாத்திரங்களையும், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சேன்ட்மேன், ஒன்டர்வுமன் உள்ளிட்ட டிசி கொமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார்.

அத்தோடு தொடர்ந்து வெளிவரவுள்ள மார்வெலின் அவெஞ்சர்ஸ் 4 மற்றும் கெப்டன் மார்வெல் ஆகிய திரைப்படங்களில் மறைந்த ஸ்டேன் லீ தோன்றியுள்ளாரென ரூசோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வருடம் வெளிவரவுள்ள ஸ்பைடர் மேன் பாகம் இரண்டில் ஸ்டேன் லீ இல்லாததை எண்ணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

மேலும் மார்வெல் உருவாக்கத்தின் பிரம்மாண்ட படைப்புகளில் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 1961 ஆம் ஆண்டு ஜேக் கெர்பியுடன் இணைந்து இவர் மார்வெல் நிறுவனத்தை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!