நாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக சற்று முன்னர் உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது,

இதன்படி, சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதிர்வரும் டிசெம்பர் 07ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பையும் உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்த உத்தரவு தொடர்பான, எதிர்ப்பு மனுக்களை வரும் 19ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர், தாக்கல் செய்ய முடியும்.

இந்த மனுக்கள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள், டிசம்பர் 5ஆம் நாள் தொடக்கம் 7ஆம் நாள் வரை இடம்பெறும்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!