சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை மகிந்த தரப்பு நிராகரித்துள்ள நிலையில், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே, அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது,

ஏற்கனவே நாடாளுமன்ற பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!