நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் 26ஆம் நாள், சிறிலங்கா அதிபரால் பதவிகவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை.

இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக 122 உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த உத்தரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்க மறுத்தால், நாடாளுமன்றத்தில் அதற்குச் சவால் விடும் பிரேரணையை நாளை கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!