நடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்…!

சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவனொருவன் நடுவழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த யாழ்யா என்ற நான்கு வயது சிறுவன் தனது குடும்பத்தாருடன் புனித பயணமாக சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கு சென்று, குடும்பத்தாருடன் விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தான்.

விமானம் கிளம்பிய 45 நிமிடத்தில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை தொடர்ந்து மோசமாக தாயின் மடியிலேயே உயிரிழந்தான்.

இதையடுத்து விமானமானது அவசர அவசரமாக அபுதாபியில் தரையிறக்கப்பட்டது.

இதன் பின்னர் சிறுவனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதர் தெரிவித்தார்.

மேலும் தெரியவருவதாவது, யாழ்யாவிற்கு பேசவோ, நடக்கவோ முடியாது. அவனை சக்கர நாற்காலியில் வைத்து தான் அழைத்து செல்வோம். எனவும் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!