“மைத்திரி, மஹிந்தவின் செயற்பாடே நெருக்கடிக்கு காரணம்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் அரசியமைப்பிற்கு முரணாக செயற்பட்டமையினாலேயே தற்போது நாடு மிக மோசமானதொரு அரசியல் நெருக்கடி நிலையினை எதிர்கொண்டுள்ளது எனத் தெரிவித்த சமூக நீதிக்கான நிலையம், சபாநாயகர் கருஜயசூரிய கட்சி பேதமின்றி, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் நோக்கில் சரியான முறையிலேயே செயற்பட்டு வருகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் கருத்து வெளியிடும் வகையில் ராஜகிரியவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சமூக நீதிக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு, ஜனநாயகம் என்பவற்றினை மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியம், சம்பிரதாயங்கள் அனைத்தையும் சீர்குலைக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்ற போதும், அவற்றைப் புறந்தள்ளி ஜனாதிபதி தன்னிச்சையாக பாராளுமன்றத்தினை இயக்குகின்றார். இவை உடனடியாக நிறுத்தப்பட எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!