அலரி மாளிகையை ரணில் சட்டவிரோதமாக பயன்படுத்துவது தெரியவில்லை? – இந்திக அனுருத்த கேள்வி

பாராளுமன்ற சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் தெரிவித்து பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை சட்ட விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருப்பது புலப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு மீறலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தடுப்பதற்காகவே அவ்வாறான சம்பங்கள் இடம்பெற்று சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டன.

அத்துடன் டிசம்பர் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாம் எதிர்பார்த்துள்ளோம். தீர்ப்பின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றோம்.

வெளிநாட்டு பிரயாணிகள் வருகை குறைவடைந்துள்ளதாகவும், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கின்றனர். நாளையே அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்றால் அவர்களும் இதற்கு முகங்கொடுக்க நேரிடும். எனவே எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நாட்டை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது. அத்தோடு யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு மாத்திரமே காணப்படுகின்றது. மக்களும் தேர்தலையே கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!