தீவிரவாதிகளின் தாக்குதலில் 47 அமெரிக்க ஆதரவு படையினர் பலி

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சீரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றுவதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் மேற்கொண்டு தீவிரவாதிகளை கொன்று வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில், ஆல் பஹ்ரா மற்றும் கரானிஜ் கிராமங்கள் மற்றும் சீரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல் தனக் எண்ணெய் வயல் அருகில் சனிக்கிழமை முதல் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் மேற்கொண்டர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!