நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த போது – கவனவீனமாக நடந்த பொலிஸ் மீது நீதவான் எச்சரிக்கை!

நீதிமன்றில் வழக்குகளை பதிவு செய்யும் போது கவனவீன மாக நடந்து கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரியை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

நகர்ப்பகுதியில் உள்ள ஊடக நிறுவன ஒன்றுக்குள் புகுந்து ஊழி யர் ஒருவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அரச தரப்பாக மாறியதாக தெரிவித்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 7 நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு நேற்று யாழ்.நீதவான் நீதிமன்றில் விசார ணை க்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த வழக்கில் அரச தரப்பாக மாற்றப்பட்டவர்கள் என தெரி வித்த இருவரும் மன்றில் சாட்சியமளிக்கை யில் தாம் அரசதரப்பாக மாற வில்லை எனவும் இச் சம்பவம் தொடர்பாக எவரையும் தமக்கு தெரியாது என தெரிவித்தனர்.

குறித்த வழக்கில் ஆதாரமாக இணைத்த வாள் ஒன்று வேறு ஒரு வழக்கில் இணை க்கப்பட்ட சான்றுப்பொருள் என்றும் மன்றில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸ் பொறுப்பதிகாரி பதிவேடு ஒன்றை வைத்து மன்றில் சாட்சியம் அளித்தார். அது அப் பதிவேடு வேறு ஒரு வழக்கு தொடர்பானது என தெரியவந்தது.

இவற்றை அவதானித்த நீதவான் பொலிஸ் பொறுப்பதிகாரியை எச்சரிக்கை செய்ததுடன் வழக்குகள் தொடர்பான விசாரணைகளின் போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்.

கவனவீன முறையில் செயற்பட்டமை தொடர்பாக கடும் எச்சரிக்கை செய்திருந்தார்.

அத்துடன் குறித்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து வழக்கில் இருந்து 7 சந்தேக நபர்களையும் நீதவான் விடுதலை செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!