வாள்­க­ளு­டன் வீடு புகுந்த கும்­பல் தென்­ம­ராட்­சி­யில் அட்டகாசம்!!

சாவ­கச்­சேரி மற்­றும் மட்­டு­வில் பகு­தி­க­ளில் வாள்­க­ளு­டன் நட­மா­டிய கும்­பல் 3 வீடு­க­ளுக்­குள் அத்­து­மீறி நுழைந்து அங்­கி­ருந்த உடை­மை­களை அடித்­துச் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது. பெற்­றோல் குண்டு வீசி­யும் அந்­தக் குழு தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்­று­முன்­தி­னம் இரவு 11 அள­வில் மட்­டு­வில் தெற்­குப் பகு­தி­யில் வீடு புகுந்த கும்­பல் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது. அவர் புன்­னா­லைக்­கட்­டு­ வன் பிரிவு கிராம அலு­வ­ல­ரா­கப் பணி­பு­ரி­கி­றார். வெளிக்­க­தவை உடைத்து வாள்­கள் கோட­ரி­யு­டன் ஆறு பேர் உட்­நு­ழைந்­த­தைக் கண்டு வீட்­டி­லுள்­ளோர் அறைக்­குள் சென்று தாழ்ப்­பாழ் போட்­டு­விட்டு பாது­காப்­பாக இருந்­த­னர்.

வீட்டு ஜன்­னல்­க­ளின் கண்­ணா­டி­கள், கதவு அடித்­துச் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. விறாந்­தை­யில் விடப்­பட்­டி­ருந்த மூன்று மோட்­டார் சைக்­கிள்­கள் அடித்­துச் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன.

இது தொடர்­பாக சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­யும் நேற்று மு.ப.9மணி வரை பொலி­ஸார் அங்கு வர­வில்­லை­யெ­ன­வும் கிராம அலு­வ­லர் தெரி­வித்­தார்.

இதே கும்­பல் நேற்று அதி­காலை 5 மணி­ய­ள­வில் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்கு முன்­பாக உள்ள கந்­தையா வீதி­யில் உள்ள வீடொன்­றின் வெளிக்­க­த­வு­க­ளைத் தாக்­கி­யது.

வீட்­டி­லி­ருந்­தோர் அரு­கி­லுள்ள வீடொன்­றில் தஞ்­ச­ம­டை­யவே அங்கு சமை­ய­ல­றைக்­குள் புகுந்து அங்­கி­ருந்த போத்­தல்­களை அடித்து நொறுக்­கி­னர். பின்­னர் பெற்­றோல் குண்டு வீசித் தாக்­கி­யுள்­ள­னர்.

வீட்­டின் கதவு, ஜன்­னல்­கள் உடைக்­கப்­பட்ட வீட்­டி­னுள் காணப்­பட்ட மோட்­டார் சைக்­கிள் தொலைக்­காட்­சிப் பெட்டி பூச்­சா­டி­கள் போன்­றவை அடித்து நொறுக்­கப்­பட்­டன என்று குறித்த வீட்­டுப் பெண் தெரி­வித்­தார்.

பின்­னர் நேற்று அதி­காலை 5.30 அள­வில் மட்­டு­வில் தெற்­கில் உள்ள மற்­றொரு வீட்­டுக்­குள் சென்ற அடா­வ­டிக் கும்­பல் வீட்டு வெளிக்­க­தவை கொத்­திச் சேதப்­ப­டுத்­தி­ய­து­டன் அங்­கி­ருந்த பொருள்­க­ளை­யம் அடித்து நொறுக்­கி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக சாவ­கச்­சேரி பொலி­ஸார் இரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­னர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கிராம அலு­வ­லர் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­த­போ­தும், சம்­பவ இடத்­துக்­குப் பொலி­ஸார் உட­ன­டி­யாக வர­வில்லை என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அத­னால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் மற்­றும் மாகாண சபை உறுப்­பி­னர் பா.கஜ­தீ­பன் ஆகி­யோ­ருக்கு கிராம அலு­வ­லர் சம்­ப­வம் தொடர்­பில் தெரி­வித்­துள்­ளார்.

சம்­ப­வம் தொடர்­பில் அவர்­கள் பொலி­ஸா­ரி­டம் கேட்­ட­பின்­னரே பொலி­ஸார் கிராம அலு­வ­ல­ரின் வீட்­டுக்­குச் சென்­றி­ருந்­தார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!