“மஹிந்தவுக்கு எதிரான மனுவை சபையில் விவாதத்துக்கு எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது”

மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அவர்களது செயலாளர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீதான விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அந்த விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. அவ்வாறு விவாதிக்கப்படுமாக இருந்தால் அது நீதிமன்ற செயற்பாடுகளை அவதிமதிப்பதைப் போன்றதாகும். எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தால் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை அவமதிப்பதற்கோ அல்லது பாராளுமன்ற செயற்பாடுகளை நீதிமன்றம் அவமதிக்கவோ இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!