“உறங்கிய யானை எழுந்து நிற்கும்:2021ல் இஸ்ரோ விண்வெளி மனிதர்கள்” – மோடி துணிகரம்.

பிஎஸ்எல்எல்வி சி-43 ராக்கெட் மூலம் இஸ்ரோ சார்பில் அமெரிக்காவின்-23 மற்றும் மற்றநாடுகளை சேர்ந்த என மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே பல்வேறு நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இஸ்ரோ சர்வதேச வர்த்தக தளமாகவும் திகழ்கின்றது.

பிஎஸ்எல்எல்வி சி-43 ராக்கெட் மூலம் இஸ்ரோ சார்பில் அமெரிக்காவின்-23 மற்றும் மற்றநாடுகளை சேர்ந்த என மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே பல்வேறு நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இஸ்ரோ சர்வதேச வர்த்தக தளமாகவும் திகழ்கின்றது. இந்நிலையில், வரும் 2021ம் ஆண்டு இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்படும் என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே உறங்கிய யானை எழுந்து நிற்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ வெற்றி: இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன. குறைந்த செலவில் வெளிநாடுகளை சேர்ந்த ராக்கெட்களும் இந்தியாவில் ஏவப்படுவதால் இஸ்ரோ வர்த்தகதளமாக உருவாகியுள்ளது.

பிஎஸ்எல்வி சி-43யில் 30 செயற்கைகோள்: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டரி கோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1 ஏவு தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் 23 செயற்கைகோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை என மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனால் இஸ்ரோ மீது உலக பார்வையும் திரும்பியுள்ளது.

உறங்கிய யானை எழுந்து நிற்கும்: நாட்டின் 72 சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உறங்கிய யானை எழுந்து நிற்கும் நேரம் தற்போது, நிலைமை மாறிவிட்டது என்று குறிப்பிட்டார். மேலும், சுகன்யான் திட்டம் மூலம் இஸ்ரோ சார்பில் 3 மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம் என்று தெரிவித்து இருந்தார்.சுகன்யான் குறித்து சிவன்: பிஎஸ்எல்சி-43 வெற்றிக்கு பிறகு அறித்த பேட்டியில் கூறியதாவது: சுகன்யான் திட்டம் தற்போது நல்ல நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது. சுகன்யானுக்கு முன்னதாக 2020ம், 2021ம் ஜூலையில் என்றும் விண்ணுக்கு ஆளில்லாத விண்கலம் செலுத்தப்படுகின்றது.

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்கள்: பிறகு தொடர்ந்து ஸ்ரீ ஹரிகோட்ட சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021ம் டிசம்பரில் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணுக்கு அனுப்படும்.

14 செயற்கை கோள்: தொடர்ந்து அடுத்தடுத்து 12 முதல் 14 செயற்கைகோள்கள் வரை விண்வெளிக்கு 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் என்ற வீதமம் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 14 செயற்கை கோள்: தொடர்ந்து அடுத்தடுத்து 12 முதல் 14 செயற்கைகோள்கள் வரை விண்வெளிக்கு 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் என்ற வீதமம் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு கயானாவில் இஸ்ரோ: பிரெஞ்சு கயானாவில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி அதிக எடை கொண்ட ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 4 டன் வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால் ஜிசாட்-11 5.86 டன் எடை கொண்டது. அதனால் இந்த செயற்கைகோளை இங்கிருந்து விண்ணில் அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது. இவ்வாறு பேட்டியில் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!