கூட்டமைப்பு மீது விசனம்!

சட்டத்தின் மூலம் அரசமைப்பு ரீதியாக, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துகளைப் பெற்றுக்கொடுப்பதையே, தனது அரசியல் முன்னெடுப்புகளில் முதன்மைப்படுத்தி வருவதாக வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் உயர்நிலை அங்கத்தவர்கள், “கிடைப்பதை எடுப்பதே உசிதம்” என்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குத் தனது நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது. எனினும் தனது செயற்பாடுகள், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.

எமது மக்களின் விடிவுக்காக, அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக, அவர்களுக்கான உரித்துகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம். இந்த நாட்டில், தமிழ் மக்கள் சகல உரித்துகளுடனும், சமஷ்டி முறையிலான அரசியல் கட்டமைப்பொன்றின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!