ட்ரம்பை சினமூட்டிய, புட்டின் – சல்மான் சந்திப்பு

ஜி-20 உச்சிமாநாடு கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ஜன்டீனாவில் புயனொஸ் அயர்ஸ் நகரில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது.

மேற்படி 13 ஆவது ஜி-20 உச்சி மாநாட்டில் உலகளாவிய ரீதியிலுள்ள 19 செல்வந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இருவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவிருந்தது. எனினும் அந்த சந்திப்பானது ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் இம் மாநாட்டின்போது புட்டின் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் கைகுளுக்கி அளவலாவி வெறுப்பேற்றியுள்ளார்.

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்திலிருந்து சவுதி மீதும் இளவரசர் முகமது பின் சல்மானுடனும் ட்ரம்ப் அதிருப்பதியுடன் உள்ள நிலையில் இச் சம்பவம் ட்ரம்ப்பை அதிகளவு கோபப்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான காணொளியும், புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாக பரவ ஆரம்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!