உலகில் எங்கும் வழங்கப்படாத தீர்ப்பு!

525119359OH024_South_Asian_
வழக்குகளுக்கு பயந்​தே அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், தனக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றில் சந்திக்க தயாராகவிருப்பதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்னை அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காக தேவையான வழக்குகளைத் தாக்கல் செய்து, தற்போது அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஐ.தே.க எடுத்துள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி இருக்கின்றார். செயலாளர் இருக்கின்றார். அந்த அரசாங்கத்தில் நாம் சேவை செய்கின்றோம். அத்துடன் வழக்கின் தீர்ப்பு குறித்து எதுவும் சொல்ல முடியாது. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் எதிர்க்கின்றோம் என்றார்.

உலகில் எங்குமே நிகழாத சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. அதாவது உலகில் முதற்தடவையாக நீதிமன்றத்தில் இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் அரசாங்க பணியாளர்கள் அதனால் இந்தத் தீர்ப்பு தவறு என்ற எண்ணத்திலேயே நாம் இருக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!