பாராளுமன்ற மோதல் : சொத்துகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா ?

பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மோதலின் காரணமாக பாராளுமன்றத்தின் சபையில் உள்ள இலத்திரனியல் வாக்கெடுப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் பெறுமதி மாத்திரம் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா எனவும், சபையின் இரு பக்கமும் அமைக்கப்பட்ட கம்பிகள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளது. அவற்றை புனரமைப்பதற்கு 30 ஆயிரம் ரூபா நிதி செலவாகும் என பாராளுமன்ற படைக்கல சேவிதர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களின் சேதங்கள் குறித்தும் தற்போது கணக்கெடுக்க்பபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!