தீர்ப்பு வழங்கப்படும் வரை தடை நீடிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு, நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீது, கடந்த 4ஆம் நாள் தொடக்கம் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

முன்னதாக, மூன்று நாட்கள் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதும், பின்னர் மேலும் ஒரு நாள் கூடுதலாக வழங்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த விசாரணைகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேவேளை, நேற்று மாலை விசாரணைகள் முடிவடைந்த பின்னர், தீர்ப்புக்கு நாள் குறிப்பிடப்படாமல், நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு அளிக்கப்படும் வரை- நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு மீதான இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!