மஹிந்த – கூட்டு எதிர்க்கட்சி முக்கிய ஆலோசனை!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கூட்டு எதிர்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவுக்குமிடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள மஹிந்தவின் உத்தியோகப்பூர்வ இலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்ற அமர்வின் போது, கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரத் தீர்மானித்துள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20வது அரசியல் திருத்த சட்டமூலம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!