நீதிமன்றத் தலையீடுகளால் அதிருப்தியில் மகிந்த

Sri Lanka Politics
இப்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை இலகுவாக தீர்க்க முடியும் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றங்களிடம் இருப்பதால் பொறுமையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கண்டி, தலதா மாளிகையில் நேற்று வழிபாடு செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவினால், மக்களுக்கு எனது பணியை நிறைவேற்ற முடியாதுள்ளது.

உலகில் எங்குமே, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் இப்படிச் செயற்பட்டதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!