ஜமால் கஜோசியின் இறுதி வார்த்தைகள் என்ன?- சிஎன்என் தகவல்

என்னால் சுவாசிக்கமுடியவில்லை என்பதை துருக்கியில் உள்ள சவுதிஅரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோஜியின் இறுதி வார்த்தை என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

தூதரகத்தில் கொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளரின் இறுதி வார்த்தையாக என்னால் சுவாசிக்கமுடியவில்லை என்பதே காணப்படுகின்றது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரியொருவர் நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்துள்ளார் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

ஜமால் கசோஜி கொலை செய்யப்பட்ட தருணங்கள் பதிவாகியுள்ள ஒலிநாடாவில் காணப்பட்ட விடயங்களின் எழுத்துவடிவ ஆவணத்தை வாசித்த அதிகாரியொருவர் இதனை குறிப்பிட்;டுள்ளார்.

ஓக்டோபர் 2 ம் திகதி பத்திரிகையாளரை கடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறவில்லை அவரை கொலை செய்வதே சவுதிஅரேபிய சந்தேகநபர்களின் திட்;டம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தன்னை கொல்ல முயல்பவர்களை எதிர்த்து ஜமால் போராடுகின்றார் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

என்னால் சுவாசிக்க முடியவில்லை என அவர் மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளரின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்படும் சத்தத்தை ஓலிநாடாவில் கேட்க முடிவதாகவும் அந்த சத்தம் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காக கொலைகாரர்களை இசையை பெரும் சத்தத்துடன் ஓலிக்கவிடுமாறு ஒருவர் அறிவுறுத்துவதையும் கேட்க முடிந்துள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொலையில் ஈடுபட்டவர்கள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர் என ஓலிநாடாவில் காணப்பட்ட விடயங்கள் குறித்த எழுத்துவடிவ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜமால்கசோஜி தூதரகத்திற்குள் செல்வது முதல் அவர் தாக்கப்படுவது உயிருக்காக போராடுவது அவரது உடல் சிதைக்கப்படுவது உட்பட அனைத்தும் ஓலிநாடாவில் பதிவாகியுள்ளமை எழுத்து வடிவிலான ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

துருக்கி அதிகாரிகள் வில் உள்ள மிக முக்கிய நபர்களிற்கு இந்த அழைப்பை கொலையில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!