நீதித்துறை மீது தலையிடும் மைத்திரி – உச்சநீதிமன்றில் மனு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நீதித்துறையை அவமதித்துள்ளதாகவும், நீதித்துறை சுதந்திரத்தின் மீது தலையீடு செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விரைவாக அறிவிக்குமாறு, சட்டமா அதிபர் மூலமாக தலைமை நீதியரசர் நளின் பெரேராவிடம் கோரவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

இது, நீதித்துறையை அவமதிக்கின்ற, நீதித்துறை சுதந்திரத்தின் மீது தலையீடு செய்கின்ற நடவடிக்கை என்று கூறியே சட்டவாளர் அனுர லக்சிறி உணவட்டுண இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் அரசியலமைப்பின் 129 ஆவது பிரிவை மீறிச் செயற்பட்டுள்ளார் என்றும், சட்டத்துக்கு முரணான சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கண்டிக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!