தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க முடிவு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றிரவு, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதனை அடுத்து, கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர,

இன்றைய நாடாளுமன்ற அமர்விலோ, கட்சித் தலைவர்கள் கூட்டத்திலோ, பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, நாடாளுமன்றக் கலைப்பு சட்டரீதியற்றது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், பொதுவாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வது குறித்து சிறிலங்கா அதிபர், தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!